Master of Education (M.Ed) (கல்வி முதுமாணிக் கற்கைக் நெறி)- 2025/2026
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
பட்டதாரி கற்கைகள் பீடம்
கல்வி முதுமாணிக் கற்கைக் நெறி - 2025/2026
Master of Education (M.Ed) - 2025/2026
கிழக்குப் பல்கலைக்கழக பட்டபின் கற்கைகள் பீடத்தின் ஊடாக கல்வி, பிள்ளை நலத்துறையினால் நடாத்தப்படவிருக்கும் கல்வி முதுமாணிக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
1) அனுமதிக்கான தகைமைகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட நான்கு வருட கற்கையுடனான கல்விமாணிப்பட்டம்.
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட யாதாயினுமொரு பட்டத்துடன், பட்டப்பின் கல்வி டிப்ளோமா. இத்துடன் ஆகக் குறைந்தது ஐந்து வருட கால கற்பித்தல் அனுபவம்.
2) தெரிவு முறை: எழுத்துமூலப் பரீட்சையும், நேர்முகப் பரீட்சையும்
3) பாடநெறிக் கட்டணம்: ரூபா 223,000.00
4) காலம் (முழுநேரம்): 01 வருடம்
5) விண்ணப்ப முடிவுத் திகதி : 30.05.2025
6) மொழி மூலம்: தமிழ்
மேலதிக விபரங்களுக்கும், விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் விண்ணப்பத்தாரிகள் ரூபா 3000.00 ஐ நிதியாளர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலக்கம் 227100190000390 மக்கள் வங்கி செங்கலடியில் வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டுடன் 9” ஓ 6” அளவுடைய ரூபா 35.00 இற்கான முத்திரை ஒட்டப்பட்டு சுய விலாசமிடப்பட்ட கடித உறையையும் இணைத்து சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / பரீட்சைகள் பகுதி, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்கு 30.05.2025 இற்கு முன் அனுப்பி வைக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / பட்டபின் கற்கைகள் பீடம் , கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு 30.05.2025 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்களை சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / பட்டபின் கற்கைகள் பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி 0652240972 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது, கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட இணையத்தளத்தினை பார்க்கவும். (http:/www.esn.ac.lk)
பதிவாளர்.
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை,
வந்தாறுமூலை,
செங்கலடி.